Connect with us

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன் – இயக்குநர் செல்வராகவன் புகழாரம்..!!

Cinema News

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன் – இயக்குநர் செல்வராகவன் புகழாரம்..!!

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன் என பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்கள் கவின் மற்றும் மணிகண்டன். இருவரும் நடிப்பில் தற்போது வெவேறு பரிமணிகள் எடுத்து வந்தாலும் அவர்களின் எதார்த்த நடிப்பும் கதை தேர்வும் ரசிகர்களை அவர்கள் பக்கம் காந்தம் போல் கட்டி இழுக்கிறது.

அந்தவகையில் அன்மையில் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படம் இளசுகள் மத்தியில் நல்ல அமோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இதேபோல் இந்த பக்கம் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் படம் நேற்று முன்தினம் உலகம் உலகம் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்டார் படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் கவின் மற்றும் ஸ்டார் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரான செல்வராகவன் கவின் மற்றும் மணிகண்டன் ஆகியோரை புகழ்ந்து பேசியுள்ளார்.

“கவினும், மணிகண்டனும் சிறந்த நடிகர்கள். அவர்கள் இருவரிடமும் உள்ள நல்ல விஷயம், அற்புதமாகவும், யதார்த்தமாகவும் நடிக்க கூடியதுதான். எந்த கதாபாத்திரத்தையும் எளிதாக உள்வாங்கி நடிக்கக்கூடியவர்கள். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் அவர்கள் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யாவின் தரமான பிறந்தநாள் பரிசு - ‘கங்குவா’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top