Connect with us

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘கள்வன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘கள்வன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான கள்வன் படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பாடகராகவும் தலைசிறந்த இசையமைப்பாளராகவும் பிரமாதமான நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவரது தற்போது திரையரங்குகளில் சக்க போடு போட்ட திரைப்படம் தான் கள்வன்.

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நபாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படம் வரும் 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top