Connect with us

கைகொடுக்காத சாஞ்சு சாம்சனின் அதிரடி – டெல்லியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான்..!!

Featured

கைகொடுக்காத சாஞ்சு சாம்சனின் அதிரடி – டெல்லியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான்..!!

நடப்பாண்டுக்கான IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடரின் 56 ஆவது லீக் போட்டியில் DC – RR அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக பிரஸ்ஸர் மற்றும் அபிஷேக் போரில் களமிறங்கினர் . ஆரம்பம் அதிரடி காட்டிய இந்த ஜோடி ராஜஸ்தான் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில் பிரஸ்ஸர் 50 ரன்னிலும் அபிஷேக் 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் அனைவரையும் அடுத்தடுத்து தட்டிதூக்கிய ராஜஸ்தான் பவுலர்கள் டெல்லி பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போட இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 221 ரன்களை குவித்தது .

இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இமாலய இலக்கை கடக்க உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோது இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் தனி ஆளாக போராடி ரன் குவிப்பில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் அவருக்கு சப்போர்ட்டாக வந்த வீரர்கள் அனைவரும் டெல்லி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முடிந்த வரை போராடிய சஞ்சு 46 ரன்களில் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top