Connect with us

“ICC WC 2023: AUS v BAN – Toss வென்ற ஆஸ்திரேலியா அணி.. பௌலிங் தேர்வு.!”

CWC23

“ICC WC 2023: AUS v BAN – Toss வென்ற ஆஸ்திரேலியா அணி.. பௌலிங் தேர்வு.!”

உலகக் கோப்பை தொடரின் 43வது போட்டி ஆஸ்திரேலியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே புனேவில் இன்று நடைபெறுகிறது. பகல் நேர போட்டியாக மகராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னர் பயிற்சியாக இந்தப் போட்டி அமைகிறது. எனவே முக்கிய வீரர்களுக்கு ஓய்வை கொடுக்கலாம் என தெரிகிறது.

அதேசமயம் இந்தப் போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது. வங்கதேசம் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலை வங்கதேசத்துக்கு உள்ளது. ஏனென்றால் தோல்வியை தழுவினால் 9வது இடத்தில் இருக்கும் 8வது இடத்துக்கு முன்னேறும். அத்துடன் 2025இல் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியனஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெறும்.

எனவே இதை தவரிப்பதற்கும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் வாய்ப்பை தக்க வைப்பதற்கும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்கேதசம் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நிலையில் உள்ளது. கடந்த போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன் மேத்யூஸ் விக்கெட்டை டைம் அவுட் முறையில் அப்பீல் செய்ததற்கு, வங்கதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து உலகக் கோப்பை 2023 தொடரிலிருந்து விலகிய அவர், இன்றைய போட்டியில் விளையாடப்போவதில்லை.

அவருக்கு பதிலாக நஜ்முல் ஷாண்டோ கேப்டனாக செயல்படுவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியை மிஸ் செய்த ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், வங்கதேசத்து எதிராக களமிறங்குவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சம்பிரதாய போட்டியாகவும், வங்கதேசத்துக்கு முக்கியதுவம் வாய்ந்த போட்டியாகவும் இன்றைய ஆட்டம் அமைகிறது. இந்தநிலையில் தற்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங் தேர்வு.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in CWC23

To Top