Connect with us

பந்துவீச்சில் மிரட்டிவிட்ட கொல்கத்தா – டெல்லி அணி 153 ரன்கள் குவிப்பு..!!

Featured

பந்துவீச்சில் மிரட்டிவிட்ட கொல்கத்தா – டெல்லி அணி 153 ரன்கள் குவிப்பு..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி கொல்கத்தா அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் KKR – DC அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி யை இந்த போட்டியில் கட்டுப்படுத்தும் முனைப்பில் கொல்கத்தா அணி பந்துவீசியது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரிதிவி மற்றும் பிரஸ்ஸர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த நடு வரிசை மற்றும் பின் வரிசை அனைவரும் கொல்கத்தா அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற டெல்லி அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்க முடியாமல் போனது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 153 ரன்கள் மட்டுமே குவித்தது. இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்கிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top