Connect with us

“ICC WC 2023: ENG v PAK – டாஸ் வென்ற இங்கிலாந்து அணி.. பேட்டிங் தேர்வு!”

CWC23

“ICC WC 2023: ENG v PAK – டாஸ் வென்ற இங்கிலாந்து அணி.. பேட்டிங் தேர்வு!”

உலகக் கோப்பை தொடரின் 44வது போட்டி பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப்பட்டியில் 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அரையிறுதி நுழைவதற்கான வாய்ப்பாக இந்த போட்டி இருந்ததது.

ஆனால் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அதிக ரன் ரேட்டில் வென்றதால், பாகிஸ்தானுக்கு இருந்த இந்த வாய்ப்பு நினைத்து கூட பார்க்கமுடியாத அளவில் தலைகீழாக மாறியுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிராக இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதி பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியும். மாறாக இங்கிலாந்து பேட்டிங் செய்தால் அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை பொறுத்து 3 முதல் 6 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும்.

ஒரு வேலை பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 300 ரன்கள் அடித்தால் 13 ரன்களில் இங்கிலாந்தை ஆல்அவுட் செய்ய வேண்டும். 400 ரன்கள் அடித்தால் 112, 500 ரன்கள் என்றால் 212 ரன்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பு 90 சதவீதம் இல்லை என்பது தெரிகிறது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் எதுவும் நடக்கும் என்பதால், அதிர்ஷ்டம் பாகிஸ்தான் பக்கம் அடித்தால் மேற்கூறிய கணிதம் ஒர்க் அவுட் ஆகலாம். இருப்பினும் இன்றைய போட்டியின் டாஸ் நிகழ்விலேயே முடிவு உறுதியாகிவிடும்.

இந்த கணக்குகள் ஒரு புறம் இருக்க இரண்டு அணிகளும் வெற்றியுடன் உலகக் கோப்பை 2023 தொடரை நிறைவு செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளும் என்பதால் சுவாரஸ்யம் மிக்க போட்டியாகவே இருக்கும் என தெரிகிறது. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஷ் பட்லர் இதுவரை விளையாடிய 8 இன்னிங்ஸில் 111 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மிகவும் மோசமான தொடராக இந்த உலகக் கோப்பை தொடர் அவருக்கு அமைந்திருக்கும் நிலையில், கடைசி போட்டியான இன்று அவர் தனது பாணியிலான அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 பேர் பலி - உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in CWC23

To Top