Connect with us

“கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு நான் கொடுத்த பரிசு இதுதான்! நடிகர் பார்த்திபன் சொன்ன விஷயம்!”

Cinema News

“கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு நான் கொடுத்த பரிசு இதுதான்! நடிகர் பார்த்திபன் சொன்ன விஷயம்!”

நடிகர் கமல் ஹாசன் இந்த மாதம் 7 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இதனையடுத்து திரையுலகினர் சேர்ந்த அனைவரும் மத்தியில் அவர் பிறந்தநாளை கொண்டாடினார்.

இதில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில், “இரவில் வந்த சூரியன்! கமல் சார் பார்ட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பின், நேற்றைய ‘முன் தினம் பார்த்தேனே’. வயதாக ஆக சிலருக்கு மட்டுமே புது வித அழகும்,பொலிவும் கூடும். கூடியமட்டும் நேரத்தை சினிமாவின் உச்சம் தொடவும், மிச்சத்தை தன் உடல்நலம் + குடும்ப மகிழ்ச்சிக்காக செலவிடும் நாயகன். ’ கங்குவா ’ காண காத்திருக்கிறேன்..

கமல் சாருக்கு என்ன பரிசளித்தேன் என்று பலரும் கேட்டதற்கு என் பதில்.. Few books to the library” எனப் பதிவிட்டு உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "குறி வைச்சா இரை விழனும்" வேட்டையன் பட டப்பிங்கில் நடிகர் ரஜினிகாந்த் - வைரல் வீடியோ..!!

More in Cinema News

To Top