Connect with us

‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக என்ட்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இந்திய சினிமாவின் உச்சம் தோட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் பல மெகா கூட்டணியில் இணைந்து நடித்துவருகிறார் . அந்தவகையில் தற்போது தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் நடிகர் கமல்ஹாசன் கைகோர்த்துள்ளார்

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் உலகநாயகனுடன் சேர்ந்து ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர் .

இந்நிலையில் கால் சீட் பிரச்சனை காரணமாக இந்த படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில நாட்களுக்கு முன் விலகி இருந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியும் இப்படத்தில் இருந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

இதனால் மாற்று நடிகர்களை தேர்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக தகவல் பரவி வந்தது . ஆனால் படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்ததால் சிம்பு தக் லைஃப் படத்தில் உள்ளாரா இல்லையா என்று சந்தேகம் இருந்து வந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு இப்படத்தில் இணைந்துள்ளதாக சிறப்பான தரமான இன்றோ வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வீடியோவில் போலீஸ் வாகனத்தை சிம்பு ஓட்டி வருவதால் ஒருவேளை இந்த படத்தில் சிம்பு போலீசாக நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதோ இந்த இன்றோ வீடியோவை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘தண்டல்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top