Connect with us

அரண்மனை 4 படத்தில் நடிக்க நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

அரண்மனை 4 படத்தில் நடிக்க நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அரண்மனை 4’ படத்தில் நடிக்க நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரையுலகில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா .
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து தற்போது மிகவும் பிஸியான நடிகையாக வலம் வரும் தமன்னாவுக்கு ஏராளமான ரசிக்கரால் பட்டாளம் உள்ளது.

அந்தவகையில் இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் ‘அரண்மனை 4’

சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது .

இந்நிலையில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூபாய் 4 – 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

ஏற்கனவே நடிகை தமன்னா நிறைய படங்களில் நடித்து வருவதால் அவர் நல்ல கதைகள் மற்றும் சம்பளம் குறித்தே தனது கால் ஷீட்டை ஒதுக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  களத்தில் கலக்கப்போவது யார்..? அகமதாபாத்தில் இன்று கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதல்..!!

More in Cinema News

To Top