Connect with us

சென்னை மண்ணில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு – பந்துவீச்சில் அதிரடி காட்டுமா சென்னை..?

Featured

சென்னை மண்ணில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு – பந்துவீச்சில் அதிரடி காட்டுமா சென்னை..?

பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் தொடரின் 61 ஆவது லீக் போட்டியில் CSK – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார் . இதையடுத்து ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை தடுக்கும் வகையில் சென்னை அணி பந்துவீச உள்ளது .

நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 6 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  CSK 2025 IPL அணி: புதிய வீரர்கள், வலுவான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் குறைகள் – அடுத்தடுத்து என்ன?

More in Featured

To Top