Connect with us

கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு – இணையத்தை கலக்கும் டக்கர் புகைப்படம்..!!

Cinema News

கமல்ஹாசனின் ‘தக்லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு – இணையத்தை கலக்கும் டக்கர் புகைப்படம்..!!

மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஷூட்டிங்ஸ்பாட்டில் கமலுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல மெகா கூட்டணியில் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடித்துவருகிறார் . அந்தவகையில் தற்போது தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர் .

ஆனால் இதில் கால் சீட் பிரச்சனை காரணமாக துல்கர் உள்பட சில முன்னணி பிரபலங்கள் படத்தில் இருந்து வெளியேறினர்

பிரம்மாண்ட பொருட் செலவில் மெகா கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில நாட்களுக்கு முன் விலகி இருந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியும் இப்படத்தில் இருந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் இவர்கள் இருவரையும் ஈடு செய்யும் வகையில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி சினிமா ரசிகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தது .

இப்படி இருக்கும் சூழலில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வரும் தக்லைஃப் படப்பிடிப்பில் சிம்பு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது . அதனை உறுதி செய்யும் வகையில் ஒரு புகைப்படமும் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனி வென்றாலும் வீழ்ந்தாலும் பலனில்லை - தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ - டெல்லி அணிகள்..!!

More in Cinema News

To Top