Connect with us

“நம்ம கேப்டனா இது? இப்படி மாறிட்டாரே..! கெத்து காட்டும் விஜயகாந்த் அவர்களின் Viral புகைப்படங்கள்!”

Cinema News

“நம்ம கேப்டனா இது? இப்படி மாறிட்டாரே..! கெத்து காட்டும் விஜயகாந்த் அவர்களின் Viral புகைப்படங்கள்!”

ரசிகர்களால் கேப்டன் என செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த், ஒருகாலத்தில் தமிழ்த் திரையுலகின் டாப் ஹீரோவாக மாஸ் காட்டி வந்தார். மதுரையில் இருந்து சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தவர், பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் வேற லெவலுக்கு வளர்ச்சிப் பெற்றார். புரட்சிகரமான வசனங்கள், கால்களால் எகிறி அடிக்கும் வித்தியாசமான சண்டைக் காட்சிகள் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார்.

மாநகர காவல், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், ரமணா என விஜயகாந்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே பல படங்கள் வெற்றி விழா கொண்டாடின. சினிமாவைப் போல ரியல் லைஃபிலும் ஹீரோவாகவே வலம் வந்தார் கேப்டன். தன்னைத் தேடி யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைத்து அழகுப் பார்த்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தான் சாப்பிடுவது தான் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என ஆர்டர் போட்டவர். ஏராளமான உதவிகள் என எப்போதுமே கேப்டனின் கைகளும் எண்ணங்களும் மற்றவர்களை அரவணைத்து சென்றன.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், ஆரம்ப காலத்தில் அங்கேயும் தனக்கான தனி முத்திரை பதித்தார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலில் தலை காட்டாமல் ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் இப்போதும் திரையுலகில் கேப்டன் விஜயகாந்தின் வைப் இருக்கிறது. சினிமா உட்பட எவ்விதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருக்கும் விஜயகாந்தை எங்கேயும் பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில், விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கூலர்ஸ் அணிந்துள்ள விஜயகாந்த், நாடியில் கை வைத்து ரொமாண்டிக் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். இன்னொரு போட்டோவில் சாலையோரம் தனது காரின் முன்பு நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளன. அதேநேரம், இது லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட போட்டோவா இல்லை அதற்கு முன்பு எடுத்ததா எனத் தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது..!!

More in Cinema News

To Top