Connect with us

“6 Years of Theeran Adhigaaram Ondru: உண்மையான கொள்ளை வழக்கு சம்பவத்தை, ரியலாக கண்முன் காண்பித்த படம்!”

Cinema News

“6 Years of Theeran Adhigaaram Ondru: உண்மையான கொள்ளை வழக்கு சம்பவத்தை, ரியலாக கண்முன் காண்பித்த படம்!”

தமிழில் உண்மை சம்பவத்தை வைத்து ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு போலீசாரால் விசாரிக்கப்பட்ட பவாரியா கொள்ளை கும்பலை வழக்கை அடிப்படையாக கொண்டு அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான படம் தீரன் அதிகாரம் ஒன்று. சதுரங்க வேச்சை பட வெற்றிக்கு பின்னர் எச். வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் தலைப்பே அடுத்த பாகங்களுக்கான சாத்தியத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.

சிறுத்தை படத்துக்கு பின் கார்த்தி போலீஸ் ஆபிசராக இந்த படத்தில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் காதல், ரெமாண்ஸ், குறும்புத்தனம் என நடிப்பில் கலக்கியிருப்பார். வில்லனாக அபிமன்யூ சிங், போஸ் வெங்கட், மனோ பாலா, மேத்யூ வர்கீஸ், சத்யன், ஆர்என்ஆர் மனோகர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். 2005 காலகட்டத்தில், அப்போது டிஜிபியாக இருந்த ஜாங்கிட் தலைமையில், பவாரிய கொள்ளை கும்பலை பிடிப்பதற்கான ஆபரேஷன் நிகழ்த்திப்பட்டது.

வெறும் கைரேகையை வைத்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் பிடித்திருப்பார்கள். இந்த சம்பவத்தை அப்படியே விறுவிறு திரைக்கதையில் சினிமாவாக உருவாக்கியிருப்பார் எச். வினோத். போலீஸ் – கொள்ளை கும்பலுக்கான சேஸ் என்று இல்லாமல், அந்த கொள்ளை கும்பலுக்கான பின்னணி கதையை இரண்டு பிளாஷ்பேக்குகளால் கிராபிக்ஸ் காட்சிகளின் மூலம் விவரித்திருப்பார்கள்.

அத்துடன் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ரியல் லொக்கேஷன்களிலும், பவாரியா தேடுதல் வேட்டை நடைபெற்ற இடத்திலும் படமாக்கி ரியல் பீலிங்க்ஸை வரவழைத்திருப்பார்கள். தீரன் படத்தின் டெக்கினக்கல் குழு ஒவ்வொன்றும் சிறப்பான பணியை செய்திருக்கும். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, தீலிப் சுப்பராயனின் பரபரப்பு சண்டை காட்சிகள், ஜிப்ரானின் பின்னணி இசை படத்தை வேற லெவலுக்கு அழைத்து செல்லும் விதமாக இருக்கும். வினோத்தின் ஷார்பான வசனங்களும் படத்தில் பெரிதாக பேசப்பட்டன. சிறந்த ஆக்‌ஷன் இயக்கத்துக்கான ஆனந்த விகடன் விருது, சிறந்த படம் விமர்சகர் பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளு இந்த படத்துக்கு கிடைத்தன.

கார்த்தி சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாகவும் இது அமைந்தது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருள் செலவில் தயாரித்து. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், பாக்ஸ் ஆபிஸிலும் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வசூலை நெருங்கியது. கடந்த மாதம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவில் இந்த நூற்றாண்டில் வெளிவந்த டாப் படங்களில் ஒன்றாக இருந்து வரும் தீரன் அதிகாரம் ஒன்று வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகிறது.

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top