Connect with us

“விடாமுயற்சி ஷூட்டிங் முடியும் முன்னே முடிந்த Business..!மாஸ் காட்டும் தல அஜித்தின் மார்க்கெட் விவரம்”

Cinema News

“விடாமுயற்சி ஷூட்டிங் முடியும் முன்னே முடிந்த Business..!மாஸ் காட்டும் தல அஜித்தின் மார்க்கெட் விவரம்”

இந்த வருடம் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் துணிவு படம் வெளியாகி இருந்தது இப்படத்திற்கு மிகவும் அதிக அளவில் வரவேற்பு இருந்தது என்றும் சொல்லலாம்,வங்கியில் நடக்கும் மோசடி விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது…பல அறியப்படாத தகவல்களை இது சொல்லி அதிகம் மக்களுக்கு உதவி இருந்தது என்றும் சொல்லலாம்…

இப்படத்தை தொடர்ந்து அஜித்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படம் நடிப்பார் என்று பார்த்தால் அவர்களது கூட்டணி அமையவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்…அதன் பின் தான் அடுத்து அஜித் தேர்வு செய்த இயக்குனர் மகிழ்திருமேனி.தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது…விறுவிறுப்பாக நடைபெற்றும் வருகின்றது படத்தின் படப்பிடிப்பு..

மற்றபடி படப்பிடிப்பு தகவல் குறித்து வேறுஎந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை…அஜித்துடன் த்ரிஷா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்…விடாமுயற்சி படத்தை ஒரே குறிப்பிட்ட ஷெட்யூலில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம் அப்படி ஒரு சம்பவம் தான் இதுவரை நடந்து இருக்கின்றது என தகவல் வந்து இருக்கின்றது.

தற்போது படத்தின் ஓடிடி ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் இரண்டுமே முடிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன…அதுவும் மிக பெரிய விலையில் முடிந்து இருக்கிறதாக தகவல் அதிகம் பேசப்பட்டது…

விடாமுயற்சி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்க சன் டிவி சாட்டிலைட் உரிமத்தை வாங்கியுள்ளார்களாம்…இரண்டையும் சேர்த்து படம் நிச்சயமாக ரூ150 முதல் 200 கோடி வரையில் Business நடந்து இருப்பதாக தகவல் வந்து வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபாஸின் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Cinema News

To Top