Connect with us

“ஷாருக்கான் நடிப்பில் வெளியான DUNKI படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?!”

Cinema News

“ஷாருக்கான் நடிப்பில் வெளியான DUNKI படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?!”

பதான், ஜவான் படங்களைத் தொடர்ந்து ஷாருக்கானின் டங்கி நேற்று வெளியானது. கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. அதேபோல், செப்டம்பரில் ரிலீஸான ஜவான் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ருத்ர தாண்டவம் ஆடியது. அட்லீ இயக்கிய இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலித்திருந்தது. ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை படைத்தார் ஷாருக்கான்.

இதனால் அவரது நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டங்கி படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. இதுவும் டங்கி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. ஷாருக்கான் – ராஜ்குமார் கூட்டணியில் உருவான டங்கி நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஷாருக்கானுடன் டாப்ஸி, விக்கி கௌஷல், போமன் இரானி ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

காமெடி, எமோஷனல், சென்டிமென்ட், சோஷியல் மெசேஜ் என வழக்கம்போல தனது கமர்சியலான ஃபார்மட்டில் ராஜ்குமார் ஹிரானி டங்கி படத்தை இயக்கியுள்ளதாக ரசிகர்கள் கூறியிருந்தனர். அதேபோல், பதான், ஜவான் படங்களை விட டங்கி தான் ஷாருக்கானின் பெஸ்ட் மூவி எனவும், வெளிநாடு சென்று படிக்க ஆசைப்படுபவர்களின் பின்னணியில் பல உண்மைகளை தில்லாக பேசியுள்ளது டங்கி என்றும் பாராட்டியிருந்தனர். ஒட்டுமொத்தமாக இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இந்நிலையில் டங்கி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, டங்கி முதல் நாளில் 30 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். இது ஷாருக்கானை பொறுத்த வரையில் மிக குறைவான வசூல் என்றே சொல்லப்படுகிறது. முதல் நாளில் நல்ல ஓபனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் குறைந்துள்ளது ஷாருக்கானுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளது. பதான் திரைப்படம் முதல் நாளில் 57 கோடி வசூலித்திருந்தது. ஜவான் முதல் நாளில் 75 கோடி வரை கலெக்‌ஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 300 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த கார்த்தியின் ரசிகர்கள் முடிவு..!!

More in Cinema News

To Top