Connect with us

11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம் – அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி..!!

Cinema News

11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம் – அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி..!!

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

திரையுலகில் நாம் பார்த்த நமக்கு மிகவும் பிடித்த நட்சத்திர ஜோடிகள் பலர் விவாகரத்து அறிவிப்பை அடுத்தடுத்து வெளியிட்டு வருவது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. சமந்தா – நாக சைத்தான்யா , தனுஷ் – ஐஸ்வர்யா , உள்ளிட்ட பலர் தங்களது விகாரத்தை அறிவித்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தனர்.

இந்நிலையில் இசையுலகில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தங்களது பிரிவு செய்தியை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :

நீண்ட யோசனைகளுக்குப் பின் நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இந்த நேரத்தில் ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்களை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதே போன்ற ஒரு அறிவிப்பை சைந்தவியும் வெளியிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பள்ளி செல்லும் காலத்தில் இருந்தே காதலித்து வைத்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாகி நடைபெற்றது . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் இவரின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top