Connect with us

போடு தகிட தகிட : விக்ரம் பிறந்தநாளில் வெளிவந்த தங்கலான் படத்தின் புதிய டீசர்..!!!

Cinema News

போடு தகிட தகிட : விக்ரம் பிறந்தநாளில் வெளிவந்த தங்கலான் படத்தின் புதிய டீசர்..!!!

சீயான் விக்ரம் இன்று தனது 57 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘தங்கலான்’ படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவின் கெட்டப் நாயகனாக வலம் வரும் நடிகர் சீயான் விக்ரமின் நடிப்பில் படு மிரட்டலாக உருவாகி உள்ள படம் தங்கலான்.

புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரமுடன் மாளவிகா மோகன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படம் கடந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அந்த தேர்தலும் இன்னும் ஓரிரு நாட்களில் நடந்து முடிய போகிறது ஆனால் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போ என்று இன்று வரை படக்குழு வெளியிடாமல் உள்ளது .

இதனால் விரக்தியில் இருக்கும் சீயான் ரசிகர்களுக்கு தற்போது சூப்பர் ட்ரீட் ஒன்று படக்குழு கொடுத்துள்ளது.


நடிகர் சீயான் விக்ரம் இன்று தனது 57 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் கொடுக்கும் விதமாக ‘தங்கலான்’ படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது .

இதோ அந்த டீசர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கில்லி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் - எந்த படம் தெரியுமா..?

More in Cinema News

To Top