Connect with us

பேட்டிங்கில் சீறிப்பாய்ந்த டெல்லி அணி – லக்னோவுக்கு 209 ரன்கள் இலக்கு..!!

Featured

பேட்டிங்கில் சீறிப்பாய்ந்த டெல்லி அணி – லக்னோவுக்கு 209 ரன்கள் இலக்கு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 64 ஆவது லீக் போட்டியில் LSG – DC அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார் . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.

அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரஸ்ஸர் மற்றும் அபிஷேக் போரில் களமிறங்கினர் . இதில் சிறப்பான ஆட்டத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரஸ்ஸர் ரன் ஏதும் இன்றி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

மறுபக்கம் சிறப்பாக விளையாடிய அபிஷேக் போரில் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சாய் ஷாப்பும் 38 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்டும்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 33 ரன்களில் பண்ட் தனது விக்கெட்டை இழந்தார் . மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ஸ்டும்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 208 ரன்கள் குவித்தது. இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது .

இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top