Connect with us

OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் – எப்போது தெரியுமா..?

Cinema News

OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் – எப்போது தெரியுமா..?

பிரித்விராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட ஆடு ஜீவிதம் திரைப்படம் OTTயில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிரித்விராஜ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் சக்கை போடு போட்ட படம் ஆடு ஜீவிதம்.

பிளஸ்ஸி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடிக்க இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் பிரித்விராஜ் அவர்களின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆடு ஜீவிதம் திரைப்படம் OTTயில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 26ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  50 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் சூரியின் கருடன் - விஸ்வரூப வெற்றியை கேக் வெட்டிக்கொண்டாடிய படக்குழு..!!

More in Cinema News

To Top