Connect with us

“உலகக்கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலிய அணி!”

CWC23

“உலகக்கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலிய அணி!”

தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 2 ஆவது அரையிறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக பவுமா மற்றும் குவின்டன் டி காக் களத்தில் இறங்கினர். இதுவரை தனது அணிக்காக எந்த மேட்ச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கேப்டன் டெம்பா பவுமா இந்த ஆட்டத்திலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். குவின்டன் டி காக் 3 ரன்னிலும் அடுத்து வந்த வான்டர் டசன் 6 ரன்னிலும் வெளியேறினர். 22 ரன்களுக்கு 3 விக்கெட் என தென்னாப்பிரிக்க அணி தடுமாறிய நிலையில், அடுத்ததாக களத்திற்கு வந்த எய்டன மார்க்ரம் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இதனால் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தடுமாறியது. 5 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த ஹென்றி கிளாசன் – டேவிட் மில்லர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. கிறாசன் 47 ரன்னில் ஆட்டமிழக்க மில்லர் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 116 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் 8 பவுண்டரியுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி 212 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்த 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். வார்னர் 29 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேற, ஸ்டீவன் ஸ்மித் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைச்சதம் கடந்த ஹெட் 48 பந்துகளில் அதிரடியாக 62 ரன்கள் சேர்த்தார்.

கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் இங்லிஷ் 28 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கேப்டன் பாட் கம்மின்ஸ் 14 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வரும் ஞாயிறன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை - கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

More in CWC23

To Top