Connect with us

உலக கோப்பை இறுதிப்போட்டியில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்திய விமானப்படை -வெளியான லேட்டஸ்ட் தகவல்

CWC23

உலக கோப்பை இறுதிப்போட்டியில் தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்திய விமானப்படை -வெளியான லேட்டஸ்ட் தகவல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதி போட்டி நாளை மறுநாள் கோலாகலமாக நடைபெற உள்ளது .

உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் புடைசூழ ஏரளாமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது இந்திய விமானப்படையின் சூரியகிரண் ஏரோபிக் குழு வானில் சாகசம் நிகழ்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

இறுதிப்போட்டி போட்டி நடைபெறும் நரேந்திரமோடி மைதானத்தின் உயரே வானில் வட்டமிட்டு பல சாகசங்களை செய்ய இருப்பதாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி மைதானத்திற்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் அனல் பறக்க நடைபெற இருக்கும் இந்த போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  👉 “Futuristic Love Story-ஆ? LIK படம் ரசிகர்களை கவருதா?”

More in CWC23

To Top