Connect with us

இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை – கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

Featured

இதுவரை யாரும் செய்யாத உலகசாதனை – கொல்கத்தா கொடுத்த இமாலய இலக்கை கடந்து வரலாறு படைத்தது பஞ்சாப் அணி..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் என்று இரவு நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய பஞ்சாப் அணி 262 என்ற இமாலய இலக்கை கடந்து கொல்கத்தா அணியை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் KKR – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இருவரும் பஞ்சாப் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.

அட்டகாசமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தி வந்த நிலையில் சால்ட் 75 ரன்னிலும் நரேன் 71 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. இதையடுத்து வந்த வந்த வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்கு ரன்களுடன் வெளியேற ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடியில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 261 ரன்களை குவித்தது. இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரபு சிம்ரன் மற்றும் ஜானி பாரிஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா பந்துகளை ஆரம்பம் முதல் சிறப்பாக கையாண்ட இருவரும் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து அசத்திய நிலையில் பிரபு சிம்ரன் ரன் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ரோசவ் 26 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து களம் கண்ட ஷஷாங் பாரிஸ்டோவுடன் கைகோர்த்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு பக்கம் பாரிஸ்டோ அதிரடியில் மிரட்ட அவருக்கு பக்கபலமாக ஷஷாங் நிதானமாக ஆடி வந்தார்.

இருவரும் கொல்கத்தா பந்துகளை சிக்ஸர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட நிலையில் பாரிஸ்டோ சதம் விளாசி கெத்தாக நின்றார் . அதுபோல் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஷஷாங் அரைசதம் கடந்து அதிரடியில் மிரட்டினார்.

See also  கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய் - கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலா

இறுதி வரை அதிரடியாக விளையாடிய இருவரும் 262 என்ற இமாலய இலக்கை கடந்து கொல்கத்தா அணியை கெத்தாக வீழ்த்தினார். இதுமட்டுமின்றி T20 விளையாட்டில் இந்த சேசிங் உலகசாதனையாக பதிவாகி உள்ளது.

ஜெயிக்கவே முடியாது என அனைவரும் நினைத்தபோது கெத்தாக களத்தில் விளையாடி அசால்டாக கொல்கத்தாவை வீழ்த்திய பஞ்சாப் அணிக்கு தற்போது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top