Connect with us

“ICC WC 2023 Semi Finals: நியூஸிலாந்தை வீழ்த்தி 4 வருட பகையை முடித்து, இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா! “

CWC23

“ICC WC 2023 Semi Finals: நியூஸிலாந்தை வீழ்த்தி 4 வருட பகையை முடித்து, இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா! “

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நியூஸிலாந்து சேஸ் செய்தது. அந்த அணிக்காக கான்வே மற்றும் ரச்சின் ரவவீந்திரா தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இருவரும் ஷமி வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் மற்றும் மிட்செல் இணைந்தனர்.

இருவரும் இணைந்து 181 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இந்திய அணிக்கு சோதனையாக அமைந்தது. சுழற்பந்து வீச்சை இருவரும் சிறப்பாக எதிர்கொண்டனர். இருவரும் ஒவ்வொரு ஓவரிலும் நியூஸிலாந்து அணிக்கு பவுண்டரி தேவைப்பட்டது.வில்லியம்சன், 69 ரன்களில் ஆட்டமிழந்தார். நெருக்கடியான தருணத்தில் இந்தியாவுக்கு தேவைப்பட்ட அந்த பார்ட்னர்ஷிப்பை தகர்த்தார் ஷமி. அதே ஓவரில் டாம் லேதம் விக்கெட்டையும் கைப்பற்றினார். கிளென் பிலிப்ஸ் உடன் இணைந்து 75 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் மிட்செல்.

பிலிப்ஸ், 41 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மார்க் சேப்மேன் 2 ரன்களில் வெளியேறினார்.119 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து இந்தியாவை அச்சுறுத்திய மிட்செல் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். அவரது விக்கெட்டையும் ஷமி கைப்பற்றினார். ஓவர்களில் விக்கெட்கள் இழப்புக்கு ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது நியூஸிலாந்து. இந்திய அணி சார்பில் ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். பும்ரா, குல்தீப் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து விதித்த சிறிய இலக்கை இந்திய அணி விரட்ட முடியாமல் போய் தோல்வி கண்டது. அனைத்து வடிவங்களிலும் நியூஸிலாந்து இதுவரை இந்திய அணியை 4 நாக் அவுட் போட்டிகளிலும் வென்றுள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் வென்று வரலாற்றை மாற்ற இந்திய அணி கடுமையாக போராடியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தாண்டு பொங்கலுக்கு வருகிறது அஜித்தின் ‘Good Bad Ugly’ திரைப்படம்..!!

More in CWC23

To Top