Connect with us

வெற்றி யார் பக்கம்?ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை!

CWC23

வெற்றி யார் பக்கம்?ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை!

உலகக் கோப்பை தொடரில் இன்று மதியம் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது..இந்த ஆட்டம் பெரிதளவில் எதிர்பார்க்க படுகின்றது என்றும் சொல்லலாம்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த கட்டத்திலும் பின்னர் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை குவித்து 3-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்றில் கால்பதித்திருந்தது…இது மிக பெரிய அளவில் கொண்டாடவும் பட்டது..ஆஸ்திரேலியா அணி இப்படி ஒரு சிறப்பை பெற்று ரசிகர்களை குஷி படுத்தி இருக்கின்றது…

காயம் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மேக்ஸ் வெல் களமிறங்கவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியை எட்டியதை தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது…அவரின் ஆட்டம் இன்னும் சிறப்பு தரும் என நம்ப படுகின்றது..

தொடக்க வீரரான டேவிட் வார்னர், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து சதம் அடித்த நிலையில் அதன் பின்னர் பெரிய அளவிலான ஆட்டத்தை கொடுக்கவில்லை.

இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வார்னர், டிராவிஸ் ஹெட் ஜோடி வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுப்பதில் நிச்சயம் அதிகமாக உழைக்கும் என தெரிகின்றது.

அதனை போல பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்த தொடரில் நல்ல ஒரு ஆட்டம் கொடுத்து வருகிறது…அந்த அணி லீக் சுற்றில் 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்து 2-வது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது..இப்படி இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியுடன் சிறந்த ஆட்டம் தராவிட்டால் உலகக்கோப்பை கனவையே மறக்க நேரிடும் என்றும் சொல்லலாம்..என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top