Connect with us

அடுத்தாண்டு பொங்கலுக்கு வருகிறது அஜித்தின் ‘Good Bad Ugly’ திரைப்படம்..!!

Cinema News

அடுத்தாண்டு பொங்கலுக்கு வருகிறது அஜித்தின் ‘Good Bad Ugly’ திரைப்படம்..!!

நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாக இருக்கும் Good Bad Ugly படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இதையடுத்து நடிகர் அஜித்குமாரின் 63வது படத்தை மார்க் ஆண்டனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் . இந்த படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இத்திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது சிறப்பான தரமான போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

ஏற்கனவே அஜித்தின் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது Good Bad Ugly படம் குறித்த அடுத்ததடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருவது அஜித் ரசிகர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திமுக அரசின் மிரட்டல்களுக்கு பா.ம.க ஒருபோதும் பணியாது - கொந்தளித்த அன்புமணி..!!

More in Cinema News

To Top