Connect with us

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு..!! யாருனு தெரிஞ்சா கண்டிப்பா ஷாக் ஆவிங்க…

CWC23

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு..!! யாருனு தெரிஞ்சா கண்டிப்பா ஷாக் ஆவிங்க…

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் , பவுலிங் , பீல்டிங் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி சொதப்பியதால் தான் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது என்றும் , இதற்கு பாகிஸ்தான் அணியை வழி நடத்திய கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் தேர்வுக்குழு தான் காரணம் என இணையத்தில் பல கருத்துக்கள் உலா வந்தன .

இந்நிலையில் 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையை நழுவ விட்ட பாகிஸ்தான் அணி இனி வரும் போட்டிகளில் புதிய கேப்டன்களின் புதிய வியூகத்தில் தங்களது பலத்தை உலகிற்கு காட்டுமா இல்லையா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in CWC23

To Top