Connect with us

மழைச்சாரலில் அசத்தல் பேட்டிங் செய்த பெங்களூரு அணி – சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு..!!

Featured

மழைச்சாரலில் அசத்தல் பேட்டிங் செய்த பெங்களூரு அணி – சென்னை அணிக்கு 219 ரன்கள் இலக்கு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 68 ஆவது லீக் போட்டியில் RCB – CSK அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார் . இதையடுத்து சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய உள்ளது.

அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலி மற்றும் கேப்டன் டியூபிலிசஸ் களமிறங்கினர் . சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இருவரும் சென்னை பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இதில் அரைசதம் கடந்து அசத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 47 ரன்களில் வெளியேறியதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து போட்டியின் நடுவே சிறு சிறு மழைத்துளிகள் வர ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் போட்டி தொடங்க அதிரடியில் மிரட்டிய கேப்டன் டியூபிலிசஸ் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த க்ரீன் மற்றும் படித்தார் நிதானமாக ஆட அணியின் ஸ்கோர் 200 ஐ கடந்தது . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 218 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சென்னை அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி ஆறுதல் வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரியின் கொட்டுக்காளி ரிலீஸ் எப்போ தெரியுமா..? வீடியோவுடன் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Featured

To Top