Connect with us

“ICC WC 2023: NZ v SL: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி! வெற்றி யாருக்கு?!”

CWC23

“ICC WC 2023: NZ v SL: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி! வெற்றி யாருக்கு?!”

உலகக் கோப்பை தொடரின் 41வது போட்டி நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு போட்டியாக மதியம் 2 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் போட்டி தொடங்குகிறது. அரையிறுதி போட்டிக்கு ஏற்கனவே இந்தியா, தென் ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றிருக்கும் நிலையில் மீதமிருக்கும் நான்காவது இடத்துக்கான போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என புள்ளிப்பட்டியிலில் அடுத்தடுத்து இடங்களில் மூன்று அணிகள் உள்ளன.

இதில் நியூசிலாந்து தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ளது. இந்த சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றியுடன் ரன்ரேட்டையும் வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளது. முதல் நான்கு போட்டிகளில் தொடர் வெற்றி நியூசிலாந்து, பின்னர் அடுத்த நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு தகுதி பெறுவதென்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 401 ரன்கள் அடித்தபோதிலும் மழை குறுக்கீடு காரணமாக DLS விதிமுறைப்படி நியூசிலாந்து தோல்வியை தழுவியது. அந்த வகையில் கடந்த போட்டி நடைபெற்ற அதே பெங்களூரு மைதானத்தில் இன்றைய போட்டியும் நடைபெற இருக்கும் நிலையில், மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு இல்லாமல், இயற்கையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என உச்சகட்ட பார்மில் இருக்கும் நியூசிலாந்து தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டி தவிர சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. பெங்களூருவில் ஸ்பின்னர்களை காட்டிலும், சரியாக பவுலிங் செய்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்பதால் இன்றைய போட்டியில் பெர்குசன், ஜேமிசன் என இருவரும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in CWC23

To Top