Connect with us

போடு தகிட தகிட : சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் ‘கொட்டுக்காளி’ – செம குஷியில் படக்குழு..!!

Cinema News

போடு தகிட தகிட : சர்வதேச திரைப்பட விழாவில் சூரியின் ‘கொட்டுக்காளி’ – செம குஷியில் படக்குழு..!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி உள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி உள்ள இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச்சென்றது.

சூரி , அன்னாபென் உள்பட ஏரளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் தற்போது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகி உள்ளது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இதற்கு முன் வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் 94-ஆவது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது மட்டுமில்லாமல் உலக அளவில் பல்வேறு உயரிய விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  AK 64 படத்துக்காக அஜித் சம்பளம் எவ்வளவு தெரியுமா! இத்தனை கோடியா?

More in Cinema News

To Top