Connect with us

போராடி வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி..எப்படியோ 7th Place கிடைச்சிட்டு!

CWC23

போராடி வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி..எப்படியோ 7th Place கிடைச்சிட்டு!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியனானது…அப்படி ஒரு வெறித்தனமான டீம் தான் இங்கிலாந்து அணி…

அப்படி இருந்த அணி இந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் நீடித்தது…இது பெரும் அதிர்ச்சியாக தான் ரசிகர்களுக்கு இருந்தது….

ஐசிசி உலகக் கோப்பைக்கான அரையிறுதிக்கு துளி கூட போட்டியில்லாமல் பரிதாபமாக இங்கிலாந்து 2ஆவது அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் விளையாடி முடித்து இருக்கின்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்…அது ஒரு நல்ல முடிவாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்..

அதனை போல BEN Stokes 50 ரன்களிலிருந்து 100 ரன்கள் அடிப்பதற்கு 20 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.கடைசியாக அவர் 84 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.,..அப்படி ஒரு சிறப்பான சம்பவமாக இருந்தது.

முதல் இன்னிங்கில் விளையாடிய இங்கிலாந்து அணி 339 ரன்கள் எடுத்து 50 ஓவர்கள் முடித்து இருந்தனர்..அதனை தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 179 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகி விட்டனர்..அதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஏழாவது இடத்திற்கு வந்து இருக்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு..!!

More in CWC23

To Top