Connect with us

விஜய் ஆண்டனி, சரத்குமார் நடிப்பில் உருவாகும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..!!

Cinema News

விஜய் ஆண்டனி, சரத்குமார் நடிப்பில் உருவாகும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..!!

விஜய் ஆண்டனி, சரத்குமார் காம்போவில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்து இன்று இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி நடை போட்டு வருபவர் தான் பன்முக திரை திறமை கொண்ட விஜய் ஆண்டனி.

தனது அபார திறமையாலும் நல்ல பண்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.

விஜய் மில்டன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார் , மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் கமிட்டாகி நடித்துள்ளனர் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி இப்படதின் டீசர் வரும் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எல்லாரும் பயப்பட தயாரா..? ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Cinema News

To Top