Connect with us

உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையில் கலக்கும் இந்திய அணியின் யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய சாதனைகள் இதோ..

CWC23

உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையில் கலக்கும் இந்திய அணியின் யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய சாதனைகள் இதோ..

உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் கலக்கி வரும் இந்திய அணியின் சில சுவாரஸ்ய சாதனை சம்பவங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் உலக கோப்பை தொடரில் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது கூடுதல் சிறப்பு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘செமி’ பைனலை – ‘ஷமி’ பைனலாக மாற்றி சாதனை

உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் ருத்ரதாண்டவம் ஆடிய இந்தியப் பந்துவீச்சாளர் ஷமி, சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ளார்.

ஒரு உலக கோப்பையில் அதிக முறை (3) 5 விக்கெட் வீழ்த்தியது; உலக கோப்பை வரலாற்றில் அதிக முறை (4) 5 விக்கெட் வீழ்த்தியது; உலக கோப்பையில் இந்தியரின் சிறப்பான பந்து வீச்சு (9.5-0-57-7); ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் (7) வீழ்த்திய இந்தியர்! WC-ல் குறைந்த இன்னிங்ஸ்-ல் (17) 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற மகத்தான பல தரமான சாதனைகளை செய்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகிய 5 தொடக்க வீரர்களும் அரை சதம் விளாசி புதிய சாதனை படைத்தனர்.

நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சுட்டி பையன் சுப்மன் கில்

நடப்பு உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி!
டி காக் – 591
ரச்சின் – 565
ரோஹித் – 503

உலககோப்பை தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார் கே.எல்.ராகுல் . பெங்களூருவில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார் .

சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஒரு ஆண்டில் மட்டும் 59* சிக்ஸர்கள் பறக்கவிட்டு, அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா , டி வில்லியர்ஸ் – 58 (2015) , கெயில் – 56 (2019)

சர்வதேச போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கி 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி

See also  தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை - அன்புமணி வலியுறுத்தல்

சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் (463 போட்டிகள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்த நிலையில், அதனை 291 போட்டிகளில் முறியடித்துள்ளார் கோலி

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

To Top