Connect with us

ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியிலிருந்து விடுவித்தது ஏன்? மனம் திறந்த மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்

Rohit_Sharma

Sports

ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியிலிருந்து விடுவித்தது ஏன்? மனம் திறந்த மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டது மற்றும் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது ஏன் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா 2015 முதல் ஏழு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். 2022 சீசனுக்கு முன்னதாக அவரை ரூ.15 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. குஜராத் அணிக்காக 2022இல் கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா, 2023இல் அணியை இரண்டாம் இடம் பெறச் செய்தார்..

இந்நிலையில், 2024 சீசனுக்கான முன்னதாக, கடந்த டிசம்பரில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியனை மீண்டும் வாங்கி அணியின் கேப்டனாக்கியது. அணிக்கு திரும்பினால் கேப்டனாக மட்டுமே திரும்புவேன் என ஹர்திக் பாண்டியா கூறியதால் தான் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது என அப்போது சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அணியில் தலைமை மாற்றத்தின் தைரியமான முடிவு குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். கேப்டன் மாற்றம் என்பது ஒரு கிரிக்கெட் முடிவு என்றும், ரோஹித்திடம் இருந்து கேப்டன் பதவியின் அழுத்தத்தை அகற்ற அணி நிர்வாகம் நினைத்ததாகவும் பவுச்சர் கூறினார்.

ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பதால், ஐபிஎல் கேப்டன்சி அவருக்கு கூடுதல் பளுவாக இருப்பதால் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக பவுச்சர் மேலும் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top