Connect with us

அதிரடி சதம் விளாசிய ரோஹித் ஷர்மா – ஆப்கான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

Featured

அதிரடி சதம் விளாசிய ரோஹித் ஷர்மா – ஆப்கான் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

இந்தியவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மல்லுக்கட்ட உள்ளது.

இதில் மொஹாலியில் உள்ள மைதானத்தில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தூபேவின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2nd வது போட்டியிலும் இந்திய அணி வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் இந்த இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் களமிறங்கினர்.

இதில் ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய கேப்டன் ரோஹித் எதிர் அணியின் பந்துகளை துவம்சம் செய்தனர் .மறுபுறம் சிறப்பாக விளையாடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து வந்த விராட் கோலி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.இதையடுத்து வந்த துபே மற்றும் சாம்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

ஒரு புறம் விக்கெட்டுகள் மளமளவென விழ மறுபுறம் அரைசதம் கடந்த அதிரடி காட்டினார் கேப்டன் ரோஹித் .பின்னர் ரோஹித்கு பக்கபலமாகா களமிறங்கிய ரிங்கு சிங் அவர் பங்கிற்கு பந்துகளை துவம்சம் செய்தார்.

சிறப்பாக விளையாடிய ரிங்கு அரைசதம் கடக்க தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ரோஹித் சதம் விளாசி ரசிகர்களை குஷி படுத்தினார்.

இதையடுத்து இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 212 ரன்களை குவித்தது.இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த ரோஹித் 121 ரன்களும் ரிங்கு சிங் 69 ரன்களும் எடுத்து கெத்தாக களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களத்தில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB - SRH அணிகள் மோதல்..!!!

More in Featured

To Top