Connect with us

அன்பு காட்டினா புலிகூட பசுதான்..! விஜய் டிவி புகழ் நடிப்பில் வெளியான Mr Zoo Keeper படத்தின் Teaser!

Cinema News

அன்பு காட்டினா புலிகூட பசுதான்..! விஜய் டிவி புகழ் நடிப்பில் வெளியான Mr Zoo Keeper படத்தின் Teaser!

நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிமூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக ஷிவாங்கியுடன் இணைந்து புகழ் செய்த பல கோமாளித்தனங்கள் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்தன. ஷிவாங்கி கடந்த சீசனில் குக்காக மாறியபோது, அண்ணே, தங்கச்சிம்மா என்று இவர்களது அலப்பறைகள் குறையாமல் பார்த்துக் கொண்டனர். கடந்த சீசனிலும் இவர்களின் லூட்டிகள் தொடர்ந்தன.

நிகழ்ச்சிக்கும் சிறப்பாக அமைந்தன. இந்த நிகழ்ச்சிமூலம் புகழ், சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார். வாய்ப்புகளுக்காக போராடிய காலம்போய், தற்போது புகழுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் Mr Zoo keeper படம் மூலம் புகழ் ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். முன்னதாக சந்தானத்துடன் சபாபதி, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அஜித்துடன் வலிமை, அருண் விஜய்யுடன் யானை போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ள புகழ், Mr Zoo Keeper படத்தின் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதை தற்போது வெளியாகியுள்ள படத்தின் டீசரில் பார்க்க முடிகிறது. இன்றைய தினம் நடிகர் விஜய் சேதுபதி சமூகவலைதளத்தில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். புகழ் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் விஜய் சேதுபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் Mr Zoo keeperஆக புகழ் நடித்துள்ள நிலையில், காணாமல் போகும் புலிக்குட்டியை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

புகழுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதை அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளதும் தற்போது வெளியாகியுள்ள டீசரில் தெரியவந்துள்ளது. இதில் அன்பு காட்டினால் புலிகூட பசுதான் என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஜே4 ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், படம் மிகப்பெரிய பாராட்டுக்களை புகழுக்கு பெற்றுத் தரும் என்று நம்பலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி..!!!

More in Cinema News

To Top