Connect with us

போடு வெறித்தனம் வெறித்தனம் – வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்..!!!

Cinema News

போடு வெறித்தனம் வெறித்தனம் – வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்..!!!

லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் ‘தலைவர்171’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் முதல் லியோ வரை இவர் இயக்கிய 5 படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படங்களாக உருவெடுத்தது.

இதையடுத்து இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் தான் தலைவர் 171 . சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட் ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகி உள்ள இந்த டைட்டில் டீசர் டீசரின் முடிவில் கூலி என்ற படத்தின் பெயர் கெத்தாக ரிவில் செய்யப்பட்டது.

இதோ தலைவர் மற்றும் லோகேஷ் காம்போவில் உருவாகும் கூலி படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை பார்த்து எப்படி உள்ளது என்பதை எங்களுடன் பகிருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பதற்றமின்றி பக்குவமாக ஆடிய லக்னோ - ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top