Connect with us

ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

Cinema News

ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் இருக்கும் பல முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் .

இவரது இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ‘இன்டர்ஸ்டெல்லர்’.

மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்த இந்தப் படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் வரும் செப்டம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தப் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பஞ்சாப் அணியிடம் இதனால் தான் தோற்றோம் - அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய CSK கேப்டன் ருதுராஜ்..!!

More in Cinema News

To Top