Connect with us

மணிகண்டன் நடிப்பில் உருவாகி உள்ள LOVER படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

மணிகண்டன் நடிப்பில் உருவாகி உள்ள LOVER படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

மணிகண்டனின் புதுவித நடிப்பில் உருவாகி உள்ள ‘LOVER’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் மணிகண்டன் .

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மணிகண்டன் குட் நைட் படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கி தற்போது பல படங்களில் நாயகனான நடித்து வருகிறார் .

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘LOVER’ இப்படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து அன்பு தொல்லை செய்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கௌரி பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள LOVER திரைப்படம், பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் அழகிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு பந்துகளை கிழித்தெடுத்த தமிழர்கள் சாய் - ஷாருக் - RCB அணிக்கு 201 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top