Connect with us

கொண்டாட தயாரா : தலையின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆகிறது ‘மங்காத்தா’ திரைப்படம்..!!!

Cinema News

கொண்டாட தயாரா : தலையின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆகிறது ‘மங்காத்தா’ திரைப்படம்..!!!

நடிகர் அஜித்தின் திரைவாழ்க்கையில் மிக படங்களில் ஒன்றாக பார்க்கப்படும் மங்காத்தா திரைப்படம் மே 1 ஆம் தேதி அன்று ரீ-ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

பொதுவாக நடிகர் அஜித்தின் பழைய படமோ, புதிய படமோ எதுவாக இருந்தாலும் அந்த படங்களை தலையின் ரசிகர்கள் எப்போதும் கொண்டாட தவறியதே இல்லை அந்த அளவுக்கு தலையின் நடிப்புக்கும் நல்ல பண்புக்கும் உலகம் முழுவதும் ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் கிளாசன நடிப்பில் கடந்த 2011 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் மங்காத்தா .

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் அஜித்துடன் திரிஷா அஞ்சலி , வைபவ் , பிரேம்ஜி , மஹத் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை மே 1 ஆம் தேதி மங்காத்தா திரைப்படம் திரையரங்குகளில் ரீ- ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் ரீ- ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது தலையின் மங்காத்தா திரைப்படம் மீண்டும் திரைக்கு வர உள்ளது அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top