Connect with us

“ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” – செம கடுப்பில் ட்வீட் போட்ட நடிகர் விஜய் ஆண்டனி..!!!

Cinema News

“ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” – செம கடுப்பில் ட்வீட் போட்ட நடிகர் விஜய் ஆண்டனி..!!!

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என நடிகர் விஜய் ஆண்டனி செம கடுப்பில் போட்டுள்ள ட்வீட் தற்போது செம வைரலாகி வருகிறது.

வினைக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான படம் தான் ரோமியோ . இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து மிருநாளிணி நடித்துள்ளார் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்பட பெரும் நடித்துள்ளனர்.

இம்மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் படக்குழு ஏற்கனவே சற்று வருத்தத்தில் இருக்கும் நிலையில் யூடுப் விமர்சகர்கள் இந்த படத்தை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர்.

இதனை கண்டு கோபமடைந்த நடிகர் விஜய் ஆண்டனி யூடுப் விமர்சகர்களுக்கு காட்டாமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

நடிகர் விஜய் ஆன்டனி வெளியிட்டுள்ள அந்த பதிவுவில் கூறிருப்பதாவது :

பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு.புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும் ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று சற்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி செம கடுப்பில் போட்டுள்ள ட்வீட் தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸாகும் பாகுபலி – ரசிகர்கள் உற்சாகம்!

More in Cinema News

To Top