Connect with us

20 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸான ‘கில்லி’ திரைப்படம் – திரையரங்குகளில் ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்..!!!

Cinema News

20 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸான ‘கில்லி’ திரைப்படம் – திரையரங்குகளில் ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜய்யின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் ரீ-ரிலீஸான நிலையில் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

பொதுவாக நடிகர் விஜய்யின் பழைய படமோ, புதிய படமோ எதுவாக இருந்தாலும் அந்த படங்களை ரசிகர்கள் எப்போதும் கொண்டாட தவறியதே இல்லை அந்த அளவுக்கு விஜயின் நடிப்புக்கும் அன்புக்கும் உலகம் முழுவதும் ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.

சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள கில்லி படத்தை ரசிகர்கள் தனது நண்பர்களுடன் சென்று திரையரங்குகளில் ஆட்டம்பாட்டத்துடன் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.

விஜய் , திரிஷா , பிரகாஷ் ராஜ் என ஏரளமான நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தை இன்று பார்க்கும் போதும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் அதே ஆர்வத்துடன் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரசிகர்களை கருத்து கூறி வருகின்றனர்.

கில்லி ரீ-ரிலீஸ் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் வேறு எந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்பதையும் எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இம்முறை எல்லாமே புதுசுதான் போல - பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா..?

More in Cinema News

To Top