Connect with us

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!!

Cinema News

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!!

சீயான் விக்ரம் நடிப்பில் கலக்கலாக உருவாகி உள்ள ‘தங்கலான்’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் கெட்டப் நாயகனாக வலம் வரும் நடிகர் சீயான் விக்ரமின் நடிப்பில் படு மிரட்டலாக உருவாகி உள்ள படம் தங்கலான்.

புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரமுடன் மாளவிகா மோகன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படம் கடந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அந்த தேர்தலும் இன்னும் ஓரிரு நாட்களில் நடந்து முடிய போகிறது ஆனால் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போ என்று இன்று வரை படக்குழு வெளியிடாமல் உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது ‘தங்கலான்’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார்.

அதன்படி “தங்கலான் படத்தின் பின்னணி இசைக்கான வேலை நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றும் இந்த இசை மிகவும் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். அதை உங்களுக்கு திரையில் காட்ட ஆவலுடன் உள்ளேன் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top