Connect with us

150 கோடி வசூலை கடந்தது பிருத்வி ராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம்..!!!

Cinema News

150 கோடி வசூலை கடந்தது பிருத்வி ராஜின் ஆடு ஜீவிதம் திரைப்படம்..!!!

பிரித்விராஜ் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் தற்போது 150 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மலையாள திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிரித்விராஜ். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் ஆடு ஜீவிதம்.

பிளஸ்ஸி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடிக்க இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

16 வருட போராட்டத்திற்கு பின் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் பிருத்வி ராஜின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ள நிலையில் அவரது நடிப்பிற்கு கிடைத்த மாபெரும் அங்கீரமென்றும் திரைத்துறையினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

More in Cinema News

To Top