Connect with us

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Featured

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதக்கி வரும் நிலையில் இனிவரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வட உள் தமிழ்நாட்டில் மே 1 முதல் 4ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளதாகவும் . மே 1ஆம் தேதி தமிழ்நாட்டில் உணர்தல் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட்(46 செல்சியஸ்) அளவுக்கு இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி, துண்டு, தொப்பி அணிந்துகொள்ள வேண்டும்.

பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும்.

தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும்.

மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய அறிவுரைகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர் .

.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் நடிக்கும் 'Good Bad Ugly' படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!!

More in Featured

To Top