Connect with us

அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிடும் ‘புஷ்பா -2’ படக்குழு – இப்போ என்ன அப்டேட் தெரியுமா..?

Cinema News

அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிடும் ‘புஷ்பா -2’ படக்குழு – இப்போ என்ன அப்டேட் தெரியுமா..?

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் . இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘புஷ்பா: தி ரைஸ்’.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பல மொழிகளில் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது . இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்திலும் ஏரளமான முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா-2′ படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா’ வரும் மே 1ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top