Connect with us

எங்களை உற்சாகப்படுத்த வேண்டிய ரசிகர்களே ஒரு கட்டத்தில் அமைதியாகி விட்டார்கள் – கேப்டன் ரோஹித் ஓபன் டாக்

CWC23

எங்களை உற்சாகப்படுத்த வேண்டிய ரசிகர்களே ஒரு கட்டத்தில் அமைதியாகி விட்டார்கள் – கேப்டன் ரோஹித் ஓபன் டாக்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உருக்கமாக பேசியுள்ளார் .

மும்பையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.இந்த போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் இறுதி போட்டிக்கு கெத்தாக முன்னேறி உள்ளது.

இந்நிலையில் இப்போட்டி குறித்து மனம் திறந்து பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது :

“மும்பை வான்கடேவில் விளையாடும்போது நீங்கள் ரிலாக்சாகவே இருக்க முடியாது. அங்கு விளையாடும்போது எப்போதுமே நம் மீது ஒரு அழுத்தம் இருக்கும். நாங்கள் பில்டிங்கில் சில தவறுகள் செய்தாலும் போட்டியின்போது பொறுமையாகத்தான் இருந்தோம். ஏனென்றால் 9 போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடிவிட்டோம்.

வில்லியம்சன் மற்றும் மிச்சலின் சிறப்பான ஆட்டத்தைக் கண்டும். நாங்கள் பதற்றம் அடையவில்லை. எங்களை உற்சாகப்படுத்த வேண்டிய ரசிகர்களே ஒரு கட்டத்தில் அமைதியாகி விட்டார்கள். இதுதான் போட்டியின் இயற்கை.” என இந்திய அணி கேப்டன் ரோஹித் ஓப்பனாக பேசியுள்ளார்.

இதேபோல் இப்போட்டி குறித்து மனம் திறந்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது :

“நாக் அவுட் போட்டிகளுடன் தொடரிலிருந்து வெளியேறுவது நிச்சயம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியின் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் களமிறங்கி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கோலியின் புகழை பாராட்டத் தவறமாட்டேன்.

வான்கடே மைதானத்தில் மிகச்சிறந்த ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் கொஞ்சம் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டார்கள், இந்திய அணிக்கு எங்கள் ஆட்டம் நிச்சயம் சவாலாக இருந்தது. இதற்காகப் பெருமை கொள்கிறேன்” என இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து குறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஓப்பனாக பேசியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : திலக் வர்மா , வதேரா சரவெடி ஆட்டம் - ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு..!!!

More in CWC23

To Top