Connect with us

IPL 2024 : திலக் வர்மா , வதேரா சரவெடி ஆட்டம் – ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு..!!!

Featured

IPL 2024 : திலக் வர்மா , வதேரா சரவெடி ஆட்டம் – ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஜெய்ப்பூரில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் RR – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஹிட்மேன் ரோஹித் ஆகியோர் களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்க கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையைக் இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேற 6 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரை தொடர்ந்து களம் கண்ட சூர்யகுமாரும் பெரியளவில் ஜொலிக்காமல் 10 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து திலக் வர்மா – வதேரா இணை பொறுப்புடன் ஆடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடி வந்த திலக் அரை சதம் கடந்து அசத்த மறுமுனையில் மிரட்டி வந்த வதேராவும் அரை சதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதி கட்டத்தில் மும்பை அணி ரன்கள் எடுக்க தவறிவிட்டது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 179 ரன்கள் குவித்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

2012ம் ஆண்டுக்குப் பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே தழுவி வந்த நிலையில், இன்றைய போட்டியிலாவது வெற்றி காணுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

See also  வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை காட்டுமா மும்பை..? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top