Connect with us

சோதனை கடந்து சாதனை படைக்கும் ஷமி – முகமது ஷமியின் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உ.பி. அரசு முடிவு

CWC23

சோதனை கடந்து சாதனை படைக்கும் ஷமி – முகமது ஷமியின் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உ.பி. அரசு முடிவு

உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர் முகமது ஷமியின் சொந்த ஊரான சஹஸ்பூர் அலிநகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என உ.பி. அரசின் அறிவிப்புக்கு பலரும் ஆதரவையும் பாராட்டுகளையும் கொடுத்து வருகின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 10 லும் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டி வரை சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் பல சாதனைகளை நிகழ்ந்திருக்கும் இந்திய வீரர்களில் முகமது ஷமியும் ஒருவர் . இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமி பல அபாரமான சாதனைகளை படைத்துள்ளார்.

ஒரு உலக கோப்பையில் அதிக முறை (3) 5 விக்கெட் வீழ்த்தியது; உலக கோப்பை வரலாற்றில் அதிக முறை (4) 5 விக்கெட் வீழ்த்தியது; உலக கோப்பையில் இந்தியரின் சிறப்பான பந்து வீச்சு (9.5-0-57-7); ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் (7) வீழ்த்திய இந்தியர்! WC-ல் குறைந்த இன்னிங்ஸ்-ல் (17) 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற மகத்தான பல தரமான சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் ஷமியின் அபாரமான திறமையை கண்டு நெகிழ்ந்து போன உ.பி அரசு அவரின் சொந்த ஊரான சஹஸ்பூர் அலிநகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

சஹஸ்பூர் அலிநகரில் சிறிய அளவிலான கிரிக்கெட் மைதானம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அம்ரோஹா மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தியாகி கூறியுள்ளார்.

கிராமத்தில் இருந்து வந்து தனது திறமையால் மட்டுமே முன்னேறி இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சோதனை கடந்து பல சாதனைகளை படைத்தது வரும் ஷமியை கவுரவிக்கும் விதமாக உ.பி அரசு எடுத்த இந்த முடிவுக்கு பலரும் ஆதரவையும் பாராட்டுகளையும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in CWC23

To Top