Connect with us

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய மன்சூர் அலி – ட்விட்டரில் கிழித்தெடுத்த த்ரிஷா

Cinema News

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய மன்சூர் அலி – ட்விட்டரில் கிழித்தெடுத்த த்ரிஷா

இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக நடிகர் மன்சூர் அலி பேசியிருப்பது திரைத்துறையினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை த்ரிஷாவும் மன்சூர் அலியின் இந்த ஆபாச பேச்சு குறித்து அவரது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பொதுவாக சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்போன நடிகர் நடிகைகளின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருப்பவர் நடிகர் மன்சூர் அலி 90 காலகட்டத்தில் வில்லனாக அனைவரும் மிரட்டி வந்த இவர் தற்போது தனது சர்ச்சை பேச்சுக்களால் அனைவரின் மனதையும் காயப்படுத்தி வருவதை சில காணொளிகளில் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்தவகையில் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக காணொளி ஒன்றில் நடிகர் மன்சூர் அலி பேசியிருப்பது இணையத்தில் செம வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது அனைவரும் மன்சூர் அலியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மன்சூர் அலியின் இந்த பேச்சுக்கு நடிகை த்ரிஷாவும் அவரது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா கூறிருப்பதாவது :

அண்மையில் நடிகர் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று என்னுடைய கவனத்திற்கு வந்தது நான் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மன்சூர் அலியின் பேச்சு மரியாதை குறைவானதாகவும், ஆணாதிக்க மனநிலையிலும் இருந்தது என்னுடன் நடிக்க அவர் ஆசைப்படலாம்; ஆனால் அவரைப் போன்ற ஒருவருடன் சேர்ந்து நடிக்காததை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ,இனி எப்போது அவருடன் சேர்ந்து நடிக்கமாட்டேன் இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என நடிகை த்ரிஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உலககின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று குஜராத்தை வீழ்த்துமா பெங்களூரு..? டாஸ் வென்ற RCB பந்துவீச முடிவு ..!!

More in Cinema News

To Top