Connect with us

மகளின் நினைவாக விஜய் ஆண்டனி எடுத்த முடிவு! காரணம் தெரிஞ்சா கண் கலங்கிடுவீங்க…

Cinema News

மகளின் நினைவாக விஜய் ஆண்டனி எடுத்த முடிவு! காரணம் தெரிஞ்சா கண் கலங்கிடுவீங்க…

விஜய் ஆண்டனி எங்கே போனாலும் பெரும்பாலும் செருப்பு அணியாமல்தான் வர்றாரு. இதுக்கு என்ன காரணம்னு பலரும் யோசிச்சிருப்பீங்க. இப்போ அதற்கான காரணத்தை அவருடைய மனைவி பாத்திமா மனம் திறந்து சொல்லியிருக்காங்க.

விஜய் ஆண்டனி பாத்திமா தம்பதியோட மூத்த மகள் மீரா. அவங்க கல்லூரிக்குப் போகப் போறாங்கன்னு ஆசையா பல இடங்களிலிருந்து நிறைய செருப்புகளையும் ஷூக்களையும் வாங்கி வெச்சிருக்காங்க.

ஆனா அந்தப் பொருட்கள் எல்லாமே அப்படியே இருக்க, மீரா மட்டும் இப்போ அவங்க கூட இல்ல.

அந்தச் செருப்புகளைப் பார்த்த விஜய் ஆண்டனி, இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் செருப்பு அணியப் போறதில்லைன்னு முடிவு எடுத்திருக்காரு. இசை நிகழ்ச்சிகள் மாதிரியான தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அணிந்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் கழற்றிவிடுவாராம்.

அதுமட்டுமில்லாமல், விலை உயர்ந்த வாட்சுகளை எல்லாம் பயன்படுத்துவதை நிறுத்திட்டு, மகள் கடைசியாக அணிந்திருந்த சுமார் 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாட்சையே இப்போதும் அணிந்திருக்கிறார்.

இந்த விஷயங்களைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்திருக்கிறார் பாத்திமா.

சில நினைவுகள் நம்மை விட்டு ஒருபோதும் விலகாது என்பதற்கு விஜய் ஆண்டனியின் இந்தச் செயல் ஒரு உதாரணம்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ₹200 கோடி சொத்து மதிப்பு! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இன்னொரு முகம் தெரியுமா?

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top